போதை மருந்து வழக்கில் கைதான நடிகை ரியாவுக்கு 14 நாள் காவல்.. பைகுல்லா சிறையில் அட்டைப்பு..

சுஷாந்த் தற்கொலையில் சுஷாந்த் தந்தை கேகே சிங் தனது மகன் தற்கொலைக்கு நடிகை ரியா சக்ரபோர்த்திதான் காரணம் போதை மருந்து கொடுத்த் தற்கொலைக்கு தூண்டி இருக்கிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்னா போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரணை சிபி ஐ, போதை தடுப்பு பிரிவு, அமலாக்க துறை என 3 மத்திய அமைப்பு அதிகாரிகள் விசாரிக் கின்றனர். .


ஏற்கனவே போதை தடுப்பு பிரிவி போலீஸால் ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சுஷாந்த் வீட்டு மானேஜர் சாமுவேல் மிரண்டா கைது செய்யப் பட்டனர். இந்நிலை யில் நேற்று ரியா சக்ரபோத்தி திடீரென கைது செய்யப் பட்டார். பிறகு ரியாவை மும்பை சயான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா உள்ளிட்ட உடல் பரிசோத னைக்காக செய்யப்பட்டது.

பிறகு வீடியோ கான்பரஸ் மூலம் மாஜிஸ்திரேட் முன் ரியா ஆஜர்படுத்தப் பட்டார். அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் அளிக் கப்பட்டது. பைகுல்லா சிறையில் இன்று அடைக்கப்படுகிறார். இதற்காக அந்த அறை கிருமி நாசினியால் சுத்தப்படுத் தப்பட்டது.
NCB arrest lands Rhea Chakraborty in 14-day judicial custody in drug case,
Rhea in Byculla jail