பசு மோரில் உள்ள ஊட்டச்சத்து விபரங்கள்

http://nutrition.agrisakthi.com/detailspage/BUTTER%20MILK/276

மோரைப் பெருக்கு, நீரைச் சுருக்கு என்பது மூத்தோர் சொல், நீரை சுருக்கி அதற்கு ஈடாக மோரை அதிகமாக்கி அருந்துவதால் நீ்ண்ட நாள் வாழ முடியும் என்பது மூத்தோர்களின் அனுபவச்சொல்.

வயிற்றுச்சம்பந்தமான நோய்களுக்கும், பலவிதமான வீக்கங்கள், தொற்றுக்கள் போன்றவற்றிற்கு காலம்காலமாக மோர் ஒரு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டுவருகிறது.  பசியின்மை, மண்ணீரல் சம்பந்தப்பட்ட நோய்,  வயிற்று எரிச்சல், வயற்றிப்புண் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த மருந்தாக மோர் விளங்கி வருகிறது

வெயில் காலங்களில் நாம் தண்ணீர் பந்தில் மோரை வைப்பதுண்டு, ஏனெனில் மோரில் 90% தண் ணீரும் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள்,  சில நொதிகள் உள்ளதால் நம் உடலின் அமிலக்காரத் தன்மையை சமன்படுத்தி உடல் வெப்பத்தினை சரி செய்கிறது. உடலில் நீரில் அளவை சரி சமமாக வைத்துக்கொள்ளவும் மோர் உதவுகிறது

அதிகமான கார உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் உபாதைகளை தடுக்க மோர் உதவுகிறது.

வயிற்றில் உள்ள ஜீரண சுரப்பிகளை தூண்டி, செரிமானத்தை சரி செய்கிறது. மோரில் உள்ள அதிக அளவு கால்சியம் பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலு சேர்க்கிறது, இதில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளதால் இருதய நோய் மற்றும் சர்க்கரை நோயாளிகளும் அருந்தலாம் , இரத்தக் குழாயில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது. இரத்தக்குழாய்கள் பெரிதாவதையும் கட்டுப்படுத்துகிறது/ மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள புரதம் உடலுக்கு வலு சேர்க்கிறது/ குறிப்பாக உடல் அமைப்பிற்கு (Skeletal Frame) வலு சேர்க்கிறது

இதிலிருக்கு ரிப்போபுளோவின்  (Riboflavin) ஊட்டச்சத்தானது  கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், உணவை சத்துப்பொருளாக மாற்றவும், அதற்குத் தேவையான நொதிகளை ஊக்குவிக்கவும் இந்த  ரிப்போபுளோவின் ஊட்டச்சத்து உதவுகிறது

புரோபயாடிக் மோர் probiotics , irritable bowel syndrome எனப்படும் குடல் நோய் அரு மருந்தாக அமைகிறது , அதேபோல் lactose-intolerant எனப்படும் பால் ஒவ்வாமை உள்ளவர்களும் மோரை அருந்தலாம்

மோரில் உள்ள  புரோட்டின்  உடல் எடை குறைப்பவர்களும் உதவுகிறது,
குடல் புற்றுநோயோ ( Cancer of the colon), வயிற்றில் உள்ள புண்களையும் குணப்படுத்துகிறது.

வயிற்றுப்போக்கு இருப்பவர்கள் மோரை தொடர்ந்து அருந்துவதால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக், எலக்ட்ரோலைட் போன்றவை வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது, அதோடு நவறட்சியையும் Dehydration நீக்குகிறது

மலச்சிக்கலை போக்குவதிலும், சிறுநீர் தொற்றை குணப்படுத்தவும், தோல் நோய்களுக்கும், தலைமுடியை நன்கு வளரவும்,  அழகு பூச்சுக்கும் மோர் பயன்படுகிறது

வெயிலில் ஏற்படும் தோல் கருமையை போக்குகிறது
நோய் எதிர்பாற்றலை உருவாக்குகிறது, இதனால் சளியையும் குணப்படுத்திட முடியும், மேலும் மூல நோயையும் குணப்படுத்துகிறது. வாயில் ஏற்படக்கூடிய புண்களை ஆற்றுகிறது

சித்த பாடல்

வீக்க மோகதரமுள் வீறுகுன்மம்
பாண்டு பித்தந்
தாக்கு மருந்திட்டததி சாரமொடு-கூக்குரலே
மாறாந் திரிதோஷ மந்தமனற் றாகம்போம்
வீறாவின் மோருக்கு மெய்.

சித்த மருத்துவ பயன்கள்

பசுவின் மோருக்கு வீக்கம் மகோதரம், வயிற்று வலி பாண்டுரோகம் பித்தகோபம்
இடு மருந்தால் வரும் நோய்கள் பேதி, திரிதோஷம் அக்கினிமந்தம் வெப்பம்
போக்கும்

உண்ணும் முறை

தினமும் தண்ணீருக்குப் பதிலாக ஒரு டம்ளர் மோர், அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து தொடர்ச்சியாக தண்ணீருக்கு பதிலாக அருந்திவரலாம். தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக்கொள்ளலாம், ஆனால் அதிகமான உப்பை சேர்க்கக்கூடாது

மோர் உடன் ஒரு துண்டு இஞ்சி அல்லது சுக்கு, சீரகம், கருவேப்பிலை சிறிது, கொத்தமல்லி சிறிது தேவைக்கேற்ப உப்பு போன்றவற்றை ஒன்றாக்கி மதிய உணவுக்குப் பின் அருந்தி வந்தால் ஜீரண சக்தி வலு பெறும், அல்சர் குணமாகும், உடல் களைப்ப போகும், உணவிற்குப் பின் ஏற்படும் மந்தம் போகும்

தலைக்கு மோர், அவகோடா , தேன் சிறிது போன்றவற்றை அரைத்து தலையில் தேய்த்து குளித்த வர தலை முடி நன்கு வளரும்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மோரை அருந்தலாம்
சளி இருப்பவர்கள் கூட மோரை அருந்தலாம்,
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் அதிகமாக மோர் அருந்துவது சிறப்பு
இரவில் மோரை தவிர்க்கவும்

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
99429-22002