a

மாட்டுகொரு நீதி.. மனிதனுக்கொரு நீதி..

“ஹரியானாவில் இரண்டு குழந்தைகள் தாங்களாகவே தீயிட்டுக்கொண்டன” என்று செய்திவராதிருந்தால் அதுவே அவைகளுக்கு கிடைத்த ஆகப்பெரிய நீதிதான்.

உத்திரப்பிரதேச வன்முறையின்போது அறச்சீற்றம் கொண்டவர்கள் மறுச்சீற்றத்திற்கு ஆளானார்கள். “தீ என்றவுடன் நீர் எடுத்துக்கொண்டு ஓடாதீர்.தீர விசாரித்தபின் செல்லுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டார்கள். “தலித்தா மற்றவனா சொல் என் கோபத்தைச்சொல்கிறேன்” என்பதாக மனிதம் செத்தபோது பதறிய நெஞ்சங்களை மதம்ஜாதி பார்த்து பதறுவதாய் நடிப்பதாக பகடி செய்யப்பட்டார்கள்.

“மான்டது மனிதனா மாடா சொல்.? கொன்றது குற்றமா இல்லையா எனச்சொல்கிறேன். உண்டது எதை? ஆடா அல்லது மாடாவெனச்சொல். உண்டது குற்றமா கொன்றது குற்றமாவெனச்செல்கிறேன்” என்கிற நிலைப்பாடுள்ள அரசும் அரசனும் அவனுக்கு துதிபாடும் ஊடகங்களும் இருக்கின்ற சமூகத்தில்…

“குழந்தைகள் தாமே கொன்றுகொண்டன தீயிற்கு தம்மையே தின்னத்தந்தன” என்கிற செய்திவராதவரை அதுவே ஆகப்பெரிய நியதிதான்.

குடிசை கொழுத்திகளின் மீதான கையாலாகா சமூகத்தின் கோபம் நீறு பூத்த நெருப்பாக எப்போதும் நீடித்திருக்க அந்த நியதியே போதும்.

நிச்சயம் ஒருநாள் பகுத்தறிவு காற்றுவீசும்போது தனல் அனலாகி அழித்தெரியும் சாதீய மதவாதக்குப்பைகளை!

  •  கோதண்டராமன் சபாபதி   https://www.facebook.com/rajai.gr?hc_location=ufi