Random image

பசு பாதுகாப்பு என்பது சட்டம் மூலம் சாத்தியமல்ல….ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்

டில்லி:

டில்லியில் ஆர்எஸ்எஸ் 3 நாள் மாநாடு நடந்தது. இதன் நிறைவு நாளான இன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத், ராமர் கோவில், இந்து&இஸ்லாம் நல்லிணக்கம், பசு பாதுகாப்பு, ஓரினச் சேர்க்கை குறித்து பேசினார்.

இது குறித்து அவர் பேசுகையில்,‘‘இந்துத்வாவுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவில் தான் இதற்கு கூக்குரல் எழுப்பப்படுகிறது. பசு என்பது பாரம்பரியத்தின் நம்பிக்கை. கிராமப் புற சிறு விவசாயிகளின் சுற்றுசூழல் சார்ந்த பொருளாதாரத்தின் அடித்தளம். பசு வழிகளின் பயனுள்ளதாக இருக்கிறது.

இதற்கு முன் யாரும் ஜெர்சி பால் குறித்து பேசியது கிடையாது. ஆனால், தற்போது இதை பற்றி பேசப்படுகிறது.பசு பாதுகாப்பு என்பது அவசியம். ஆனால், இது சட்டத்தின் மூலம் நடைபெறாது. நாட்டின் மக்கள் தான் பசுக்களை பாதுகாக்க வேண்டும். அவை சுதந்திரமாக சுற்றித்திரிய அனுமதித்தால் அதன் மீதா அச்சுறுத்தல் ஏற்பட்டு அதன் புனித தன்மை குறைந்துவிடும்.

சட்டத்தை கையில் எடுத்து கொண்ட வன்முறையில் ஈடுபடுவது, சொத்துக்களை அழிப்பது போன்றவற்றை சகித்துக் கொள்ள முடியாது. சட்டத்தின் வழியை பின்பற்ற வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அனைத்து மதமும் சமம் என்றால் ஏன் மதமாற்றம் நடக்கிறது. அதனால் இதன் நோக்கம் வேறு விதமாக தான் இருக்கிறது. இந்த சமுதாயத்தில் ஒவ்வொருவரும் ஒரு அங்கம். இதில் சிலர் வேறுபட்டு இருக்கிறார்கள். அவர்களும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்.

ஆரோக்கியமான சமுதாயத்தை உறுதி செய்ய வேண்டிய காலமாற்றம் விரைவில் வரும். ஆங்கிலம் உள்ளிட்ட எந்தவிதமான மொழியை கற்பதில் தவறில்லை. ஆனால், தாய்மொழியில் கல்வி பயில வேண்டும்’’ என்றார். றைகளிலும் பொறியியல் மாணவர்கள் கால் பதித்து வருவது வரவேற்க்கத்தக்கது. வளம் உள்ள இதர துறைகளிலும் பொறியியல் மாணவர்கள் சாதிக்க வேண்டும். தேசத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அனைத்து துறை திறன்களுடன் கூடிய கல்வி அவசியம்’’ என்றார்.