நாகர்கோவில், 

ன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மழைநீரில் மூழ்கி 25 மாடுகள் உயிரிழந்துள்ளன.

உதிரப்பட்டியில் உள்ள கோசாலையில் வெள்ள நீர் புகுந்ததில் மாடுகள் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாடுகள் உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஓகி புயல் தற்போது லட்சத்தீவை நோக்கி நகர்ந்துள்ளது. இருந்தாலும் இன்னும்  குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.

புயலின் கோரத்தாண்டவம் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் புயிலின் காரணமாக ஏராளமான நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழையாறு உடைந்து அந்த பகுதிகளில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டினுள்ளேயே முடங்கி உள்ளனர்.

மேலும், சுசீந்திரத்தில் உள்ள புகழ்பெற்ற தாணுமாலயன் சுவாமி கோவிலிலும் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக கோவிலுக்குள் செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். அங்கிருந்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான கோசாலை, அருகிலுள்ள  உதிரப்பட்டியில் உள்ளது. அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மாடுகளில் பல  வெள்ள நீர் புகுந்ததில் மூழ்கி உயிரிழந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் முழுமை யான சேத விவரம் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.