பசு மாடு வளர்த்தால் 6 மாதங்களில் சம்பாதித்து விடலாம்: திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப்

--

அகர்தலா:

சு மாடு வளர்த்தால் 6 மாதங்களில் சம்பாதித்து விடலாம் என்றும், ஆனால், தொழிற்சாலைகள் ஏற்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு தேவை என்று  திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் கூறி உள்ளார்.

மாநிலத்தில் பசுமாடுகள் வழங்கும் திட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ள முதல்வர், இதன் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு அகலும் என்றும், சுய வேலைவாய்ப்பு பெருகும் என்றும் கூறி உள்ளார்.

 

ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  பட்டதாரிகள் வேலைவாய்ப்புகளை தேடி அரசியல் வாதிகளின் பின்னால் ஓடுவதை விட்டுவிட்டு பால்மாடு வளர்க்கலாம் என கூறியிருந்த நிலை யில், தற்போது, 5 ஆயிரம் குடும்பங்களுக்கு பசுமாடுகளை விநியோகிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு கால்நடைகளை வாங்குவதற்கு அரசு கடன்களை வழங்கும் என்று தெரிவித்துள்ள நிலையில்,  மாடு வளர்ப்புக்கு மக்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இலத்தில் பசுமாடுகளை வளர்த்து, அதன் மூலம் கிடைக்கும் பாலை தானும், தனது குடும்பமும் அருந்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக மாநில மக்களிடையே  ஊட்டச்சத்துக் குறைபாடு நீங்கும் என்றும், மாநிலத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், நாட்டில்,  பெரிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்றால், 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தால்தான் முடியும் என்றும், இதன் காரணமாக  2 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் ஆனால்,  ஆனால் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் பசுக்களை கொடுத்தால், 6 மாதங்களில் சம்பாதிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

இவ்வாறு முதல்வர் பிப்லப் குமார் தேவ்  கூறி உள்ளார்.