பெய்ஜிங்:

10 ஆண்டு பதவி காலத்தை முடித்த பின்னரும் மீண்டுமு அதிபர், துணை அதிபர் பதவிக்கு வரலாம் என்று அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய சீனா அளுங் கட்சி முடிவு செய்துள்ளது.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அதிபர், துணை அதிபர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். ஒருவர் 2 பதவி காலத்தை அதாவது 10 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டால் 3வது முறை போட்டியிட முடியாது. இது அந்நாட்டு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனா அதிபராக உள்ள ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு முதல் சீனாவின் ஆளும்கட்சி தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும் இருந்து வருகிறார். தனது பதவிக்காலத்தில் முதல் 5 ஆண்டுகளை விரைவில் ஜி ஜின்பிங் விரைவில் நிறைவு செய்கிறார். அதோடு அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமை குழு மாநாடு நாளை பெய்ஜிங் நகரில் நடக்கிறது. இதில் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள 10 ஆண்டு பதவியில் இருந்தவர் 3வது முறையாக அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற நிபந்தனையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது நடைமுறை படுத்தப்பட்டால் 2022-ம் ஆண்டுக்கு பின்னரும் அதிபர் தேர்தலில் ஜி ஜின்பிங் மீண்டும் போட்டியிட்டு அதிபராக நீடிப்பார் என்று கூறப்படுகிறது.