இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு: திருப்பூர்-கே.சுப்பராயன் ;நாகப்பட்டினம்-எம்.செல்வராசு

சென்னை:

திமுக கூட்டணியில் 2 மக்களவை தொகுதிகளை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

அதன்படி, திருப்பூர் மக்களவை தொகுதியின் கே.சுப்பராயன் போட்டியிடுகிறார். இவர் ஒரு முறை எம்பி ஆகவும் இருமுறை எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.செல்வராசு 1989, 1996, 1998 என மூன்று முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.