இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி காலமானார்…

கோவில்பட்டி: இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருக்கு  வயது 92.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த அய்யலுசாமி, 1996 முதல் 2001 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அய்யலுசாமி  இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.