தா.பாண்டியன் சென்னை மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
85 வயதாகும் தா.பாண்டியன் தற்போது கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்னை காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். டயாலிசிஸ் செய்தும் வருகிறார்.
இந்நிலையில் தா.பாண்டியன் இன்று மூச்சு திணறல் மற்றும் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.