செய்தியாளர்கள் காவல்துறையினருடன் பயணிக்க வேண்டாம்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை

தண்தேவாடா:

த்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் தூர்தர்ஷன் சேனலின் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 காவலர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

இது ஊடக வட்டத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து மாவோயிஸ்டுகள் 2 பக்க கடிதம் மூலம் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

அதில், எக்காரணம் கொண்டும் செய்தியாளர்கள், ஊடகத்துறையினர் காவல்துறையினருடன் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.

மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ள விளக்க கடிதம்

சத்தீஸ்கர் மாநிலத்தில்  காவல்துறைக்கும்  மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விரோதம் நீடித்து வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மாவோயிஸ்டுகளை வேட்டை யாடுவதும், மாவோயிஸ்டுகள் காவல்துறையினரை சுட்டுக்கொல்வதும் நடந்து வருகிறது.

தற்போது சத்தீஷ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.  90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்தில்,  வரும் நவம்பர் 12 மற்றும் 20 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக அங்கு மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் (அக்டோபர்) 30ந்தேதி தேர்தல் தொடர்பாக செய்திகளை சேகரிக்க அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் ஊடகத்தை சேர்ந்த குழுவினர் காவல்துறையினர் பாதுகாப்புடன் தண்தேவாடா மாவட்டத்தில் உள்ள ஆரன்பூருக்கு காட்டுப்பகுதி வழியாக சென்றனர்.

அப்போது அவர்கள்மீது  மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில்,  2 காவல்துறையினர் உள்பட  அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

மாவோயிஸ்டு தாக்கதலில் உயிரிழந்த ஒளிப்திவாளர் சாஹு

தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளரான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அச்சுதானந்த சாஹு, பணி நிமித்தம், டில்லியில் வசித்து வந்தார். அவருக்குக் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒளிப்பதிவாளர் சாஹு மரணம் இந்திய ஊடகத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் தரப்பில் இருந்த விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. 2 பக்க அளவிலான கடிதம் என்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், இனிமேல் ஊடகத்துறையை சேர்ந்த வர்கள் யாரும் காவல்துறையினருடன் பயணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CPI (Maoist) issues a clarification on the killing of Doordarshan cameraman, செய்தியாளர்கள் காவல்துறையினருடன் பயணிக்க வேண்டாம்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
-=-