இருசக்ர வாகனத்தில் சென்ற சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்

 

நெட்டிசன்:

mannai kalidas  அவர்களின் முகநூல் பதிவு:

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள  விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கேட்டு கடந்த மூன்று நாட்களாக  வட்டாச்சியர்கள் அலுவலகங்கள் முன்பு  தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர் முற்றுகை காத்திருப்பு  போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர் .

மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று சென்னையிலிருந்து மன்னைக்கு  வருகை தந்த  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் மிகவும் எளிமையாக மன்னார்குடி ரயில் நிலை யத்திலிருந்து தன்னை அழைத்து செல்ல .வந்த  மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்
தோழர் துரை அருள்ராஜன் அவர்களின்  இரு சக்கர வாகனத்தில் ஏறி  மிகவும் எளிமையாக சென்றார்.

சாதாரண கிளைக் கழக செயலாள்ரகளே கார் அணிவகுப்பு, ஆதரவாளர்கள் கூட்டம் என்று பகட்டாக வலம் வரும் காலத்தில், ஒரு  தேசிய கட்சியின் மாநில செயலாளர், இத்தனை எளிமையாக இருப்பது ஆச்சரியம்தானே!