ஆர்.கே.நகரில் மா.கம்யூ போட்டி!! ம.ந.கூட்டணிக்கு திருமாவளவன் முழுக்கு

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் போட்டியிடுகிறார். இதற்கிடையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகுவதாக தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது குறித்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகுகிறோம். தேர்தலில் தனித்தனியாகவும், மக்கள் பிரச்னையில இணைந்து செயல்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் கட்சிககள் முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி முறிவு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் அந்த தொகுதி செயலாளருமான லோகநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.