மே.வங்க மாநிலத்தில்  இடதுசாரிகளுடன்  காங்கிரஸ் கூட்டணி..

மே.வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.
இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு மத்தியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைவர் பதவி ஏற்ற பின் முதன் முறையாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சவுத்ரி’’ மே.வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் தயாராக உள்ளது’’ என்று தெரிவித்தார்.

’கொரோனா தொற்று ஓய்ந்த பின் , மோசமான ஆட்சி நடத்தும் திரினாமூல் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்தும் ‘’ என்று குறிப்பிட்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி’’ மதச்சார்பற்ற கட்சிகளுக்கும், மதவாத சக்திகளுக்கும் இடையேயான வலிமையான போட்டியாக இந்த சட்டசபை தேர்தல் இருக்கும் ‘’ என்றார்.

5 முறை மக்களவை உறுப்பினராக இருந்த சவுத்ரி, ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மே.வங்க மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.

-பா.பாரதி.