பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி கைது

ன்னார்காடு, கேரளா

ரு இளம் பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள மன்னார்காடு பகுதியில் வசிப்பவர் 28 வயதான விஜேஷ் என்பவர்.   இவர் கொடக்காடு பகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளராக பதவியில் உள்ளார்.  அத்துடன் டி ஒய் எஃப் ஐ எனப்படும் கம்யூனிச்ட் அமைப்பில் இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜேஷ் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.    அந்த சம்பவத்தை வீடியோவாகவும் பதிந்துள்ளார்.    அதன் பிறகு அந்த வீடியோவை காட்டி மிரட்டி மீண்டும் தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.

அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் இது குறித்து மன்னார்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   போலீசார் இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.   தற்போது இந்த வழக்கில் விஜேஷ் கைது செய்யபட்டுள்ளார்.    அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டியது கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.