அயோத்தி வழக்கு தீர்ப்பின் சில அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சி

டில்லி

யோத்தி வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில அம்சங்கள் கேள்விக்கு உரியதாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று உச்சநீதிமன்றம் அளித்த அயோத்தி வழக்குத் தீர்ப்பு அரசியல் உலகில் ப்ரபரபை ஏற்படுத்தி உள்ளது.    இது குறித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.    பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.    மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ராஜா இந்த தீர்ப்பு குறித்து ஒரு சில கேள்விகள் எழுப்பியுள்ளார்.

ராஜா, “அயோத்தி பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியவில்லை என்றால் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்வு காணலாம் என மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.  தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு சமரசமான தீர்ப்பு என்றாலும் ஒரு சில விவரங்கள் குறித்துத் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்படாததால் அது கேள்விக்கு உரியதாக உள்ளது.

குறிப்பாக தீர்ப்பில்  கடந்த 1992 ஆம் வருடம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட மீறலான செய்கை எனக் கூறப்பட்டுள்ளது.  அவ்வாறு சட்ட விரோத செயலை செய்தவர்களுக்கு இதுவரை தண்டனை அளிக்கப்படவில்லை.   ஆனால் அது குறித்து உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது?    இனியாவது அந்த குற்றவாளிகள் மீது வழக்கு நடந்து அவர்கள் தண்டிக்கப்படுவார்களா?” எனக் கேள்விகள் கேட்டுள்ளார்.