தொடரும் கொடூரம்: சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி

--

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று மீண்டும் நடந்த வெடிவிபத்தில் ஐந்து பேர்  பலியானார்கள்.
சிவகாசி அருகிலுள்ள வெற்றிலையூரணி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிமருந்துகளில் ஏற்பட்ட உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டது.  இதனால் பெரும் சத்தத்துடன் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 2 பெண்கள்  3 ஆண்கள்  பலியானார்கள்

இந்திய பட்டாசு உற்பத்தியில் பெருமளவு சிவகாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள  பட்டாசு ஆலைகளிலேயே நடக்கிறது. இந்த ஆலைகளில் ஏராளமான தொழிலாளிகள் வேலை பார்க்கிறார்கள். வறட்சியான இந்த பகுதியில் பட்டாசு ஆலைகள்தான் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது.

ஆனால் இந்த ஆலைகளில் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஆகவே அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் பலியாவது தொடர்கதையாக உள்ளது.