லகாபாத்

த்திரப் பிரதேசத்தில் தீபாவளிக்கு வந்துள்ள பட்டாசுகளில் பலவற்றுக்கு அரசியல் வாதிகள் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

தீபாவளி சமயத்தில் சேலை மற்றும் பல உடைகளுக்கு திரைப்படப் பெயர்கள் வைப்பது தமிழ்நாட்டு வழக்கம்.  அந்த சேலைகளுக்கும் திரைப்படப் பெயர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்றாலும், அந்தப் பெயரின் காரணமாக விற்பனை அதிகரிப்பது வழக்கம்.  அதே போல் உத்திரப் பிரதேசத்தில் விற்கப்படும் பல பட்டாசுகளுக்கு அரசியல் வாதிகளின் பெயர்களும், மற்றும் சமீபத்திய அரசியல் நிகழ்வான ஜி எஸ் டி, பணமதிப்புக் குறைப்பு ஆகியவைகளின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.

இந்த பெயர்களில் பிரதமர் மோடி, அகிலேஷ் யாதவ், யோகி அமர்நாத், மற்றும் ராகுல் காந்தி ஆகியோரது பெயர்கள் குறிப்பிடத்தக்கவை.  அதே போல் ஜி எஸ் டி கறுப்பு பாம்பு என்னும் பெயரில் பாம்பு மாத்திரைகள், மதிப்புக்குறைந்த மாதுளை (பணமதிப்புக் குறைப்புக்காக) என்னும் பெயரில் ஒரு சர வெடி, அகிலேஷ் ஆடம் பாம், ஒளிரும் இந்திய நட்சத்திரம் என்னும் பெயரில் ராகுல் படம் வரைந்த வாண வெடி, யோகி சரம், ஆகிய வெடிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது, “பட்டாசு விலைகள் மிகவும் உயர்ந்துள்ளதால் தற்போது விற்பனை குறைந்து காணப்பட்டது.  அதை ஓரளவு இந்த அரசியல் வெடிகள் அதிகமாக்கி உள்ளது.  இந்த புதுப் பெயர்களால் வெடிகளின் விலைகள் அதிகமாக இருந்தாலும் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.  நான் இந்த வெடிகளை குடவுனில் இருந்து எடுத்து வரும் போது இவ்வளவு விலை கொடுத்து யாரும் வாங்க மாட்டார்கள் என நினைத்தேன்.   ஆனால் இவை அனைத்தும் இந்தப் பெயர்களுக்காகவே விற்றுத் தீர்ந்து விட்டன” என தெரிவித்தார்.