பட்டாசு வெடிக்க மேலும் சில மணி நேரம் அனுமதி கிடைக்குமா?: தமிழக அரசு மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை

சென்னை:

ட்டாசு வெடிக்க மேலும் 2 மணி நேரம்  அனுமதி  கேட்டு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற உள்ளது.

மனுவில், காலை 4 மணி முதல் 6 மணி வரை மேலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று  தமிழக அரசு சார்பில் கோரப்பட்டு உள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று செய்யப்பட்ட பொதுநல வழக்கில், பட்டாசு வெடிக்க தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம், பட்டாச வெடிக்கவும், தயாரிக்கவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தீர்ப்பு கூறியது.

உச்சநீதி மன்ற தீர்ப்பு படி,  தீபாவளி அன்று  இரவு 8 மணி முதல் 10 மணி வரை சுமார் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க  மட்டுமே அனுமதி அளித்தும் உத்தரவிட்டது.

இது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. விசேஷ நாட்களில்  பட்டாசு வெடிக்க கடுமையான நிபந்தனைகள் விதித்து அனுமதி அளித்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. விசாரணையை தொடர்ந்து பட்டாசு வெடிக்க மேலும் சில மணி நேரம் அனுமதி கிடைக்குமா என்பது தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published.