இந்த ஆண்டு டில்லியில் பட்டாசு வெடிக்க முடியாது

ச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்த வருட தீபாவளிக்கு டில்லயில் பட்டாசு வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுக்க பட்டாசு தயாரிக்க, விற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன.டில்லி உள்ளிட்ட மற்றும் சுற்றுப்புற ப் பகுதியில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும், வெடிக்க வேண்டும். அடுத்தது பேரியம் கலந்த பட்டாசுகளை பயன்படுத்த கூடாது என்பவைதான் அந்த இரு முக்கிய அம்சங்கள்.

பசுமை பட்டாசு என்பதை எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து CSIR, PESCO உள்ளிட்ட அமைப்புகளோடு கலந்தாலோசித்து மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் ஒரு அறிக்கையை உச்சநீதிமன்றம் முன் தாக்கல் செய்தது.

ஆனால் அதன் செயல்  வடிவம் இப்போது வரை வெளியாகவில்லை. அதாவது பசுமைப் பட்டாசை செய்வது என்பது இப்போது வரை ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது.

அடுத்தது பேரியம் குறித்த விசயம். அதாவது குழந்தைகள் பட்டாசாக கருதக் கூடிய வெடிக்காத கம்பி மத்தாப்பூ, ரோல் போன்றவற்றை பேரியம் கொண்டு மட்டுமே தயாரிக்க இயலும்.  இவையும் பசுமை பட்டாசுகள் கிடையாது.

ஆகவே தற்போதைய சூழலில் பட்டாசு மற்றும் மத்தாப்புக்களை  டில்லியில் விற்க முடியாது.  ஆகவே டில்லி பகுதியில் இந்த வருடம் பட்டாசோடு தீபாவளி கொண்டாட வாய்ப்பில்லை.