லக்னோ: காற்று மாசு காரணமாக தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  பாஜகவின் சர்ச்சை நாயகன் சாக்சி மகராஜ்  மீண்டும் கொளுத்திப்போட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

பாரதியஜனதா கட்சியின் சர்ச்சை நாயகனாக திகழ்பவர் சாக்சி மகராஜ். உ.பி. மாநில்த்தைச் சேர்ந்த துறவியான இவர்,  உன்னாவ் தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறை எம்.பியாக  தேர்ந்தெடுக்கப்பட்டவர். சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது  பேசி மக்களிடையே தன்னை பிரபலப்படுத்திக்கொள்வதில் முதன்மையானவர்.

ஏற்கனவே  டில்லியில் உள்ள ஜும்மா மசூதியை இடித்து தள்ளுங்கள்.. அங்கு இந்துக் கடவுள்களின் விக்கிரகங்கள் இல்லையெனில் என்னை தூக்கிலிடுங்கள் என்று  பேசி பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்,  ‘‘ஷரியத் நீதிமன்றங்கள் வேண்டும் என்பவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று இனரீதியிலாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர். மேலும்,  அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இங்கு வாழ தகுதியற்றவர்கள்… அவர்கள் தாராளமாக பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்றும் ஆவேசமாக தெரிவித்தனர்.

இவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க  பசுமை தீர்ப்பாயம், மற்றும் பல மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. காற்று மாசு ஏற்படுவதை தடுக்கவே இந்த  தடை போடப்பட்டு உள்ளது.  ஆனால், சாக்சி மகராஜ் இதையும் சர்ச்சையாகிவிட்டார்.

எந்த வருடம் ஆடு இல்லாத பக்ரீத் கொண்டாடப்படுகிறதோ அந்த ஆண்டு, தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கப்படாது என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகையை தீபாவளியுடன் ஒப்பிட்டு  அவர் கூறிய கருத்து உபியில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது குறித்து கூறிய சாக்சி மகராஜ், ‘நம் நாட்டில் எந்த வருடம் ஆடு இல்லாத பக்ரீத் கொண்டாடப்படுகிறதோ அதே ஆண்டு, தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பது நிறுத்தப்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் காரணம் காட்டி பிஹார், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் பட்டாசு வெடிப்பதை தடை செய்துள்ளன. உபியிலும் தடை விதிக்க வேண்டும் என சிலர் குரல் எழுப்பிய நிலையில்,  பாஜக எம்.பி சாக்சி மகராஜ் இந்த கருத்தை வெளியிடடுள்ளார்.

இவர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,  டெல்லியில் தனது அரசு குடியிருப்பில் தனிமையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.