சென்னை:

திமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ள நிலையில், புதுச்சேரி சட்டமன்ற இடைத்தேர்த லில் இரு கட்சிகளும் தனித்தனியாக  தங்களது கட்சியினரிடம் விருப்பமனுக்களை வாங்கி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு கட்சிகளுக்கு இடையே உறவு முறிந்து விட்டதோ என்று கட்சித் தொண்டர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி உள்பட புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்றுமுதல் வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும், விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் என்றும் கூட்டணி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆனால், அதிமுக கூட்டணி சார்பில், எந்த கட்சி போட்டியிடும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக பாஜக தனியாக விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. அதுபோல அதிமுகவும் தனியாக விருப்பமனு பெற்று வருகிறது.

இதன் காரணமாக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.