செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழலாம்….: மயில்சாமி அண்ணாதுரை

அரியலூர் :

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் செயற்கை கோளை செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

உலக நாடுகள் தற்போது சந்திரனை விட்டுவிட்டு செவ்வாய் கிரகம் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளில் பல்வேறு விண்கலங்களை அனுப்பி செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவும் தன் பங்குக்கு, மங்கல்யான் என்ற விண்கலத்தை செலுத்தி  செவ்வாயின் சுற்று வட்டப் பாதை  குறித்து ஆய்வு செய்து வருகிறது.  செவ்வாயில்  முதலில் தண்ணீர் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தவர்கள் தற்போது  உயிர்கள் வாழ்கின்றனவா என்பது குறிந்து ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்து உள்ளார். அரியலூர் வந்திருந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,  செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழல் குறித்து தற்போது ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது என்றும்,  வரும் காலத்தில் சூரியனை ஆராய்ச்சி செய்ய ஆதித்யா செயற்க்கோள் அனுப்பப்படும் என்றும் கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரைதான் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷனின் திட்ட இயக்குனராக இருந்து வருகிறார்.. இவர் 1982ம் ஆண்டு முதல் இஸ்ரோவில் இணைந்து பணியாற்றி வரும் அண்ணாதுரை, பல்வேறு ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள்களை ஏவும் திட்டங்களில் முக்கியப் பங்காற்றியவர்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான மங்கள்யான் விண்கலத்தை  நிறுவியது, திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள  அண்ணாதுரைதான் சந்திரயான் 1 திட்டத்திற்கும் இவர்தான் திட்ட இயக்குநராக இருந்துள்ளார். சந்திரயான் 2 திட்டத்தையும் இவர்தான் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed