2016-17ம் நிதியாண்டில் வங்கிகளின் கடன் வளர்ச்சி 5 சதவீதம் சரிவு

மும்பை:

கடந்த 60 ஆண்டு வரலாற்றில் இல்லாத “வகையில் 2016-17ம் ஆண்டில் கடன் வளர்ச்சி 5.08 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

கடந்தாண்டு மார்ச் வரை வங்கிகளின் கடன் நிலுவை 75.01 டிரில்லியனாக இருந்தது. இது கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 78.81 டிரில்லினாக இருந்தது. இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதத்தை நெருங்கியுள்ளது. வட்டி விகிதமும் இறங்கு முகமாக உள்ளது.

கார்பரேட் நிறுவனங்கள் நடைமுறை மூலதனனத்திற்கு கூட பத்திரங்களை வெளியிட்டு வருவதும் கடன் சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதோடு வங்கிகளும் கடன் தர மறுப்பு தெரிவிப்பதும் ஒரு காரணம். கடந்த 1953-54ம் நிதியாண்டிற்கு பிறகு தற்போது 2016-17ம் ஆண்டில் கடன் வளர்ச்சி குறைந்துள்ளது.

2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 10.69 சதவீதம் கடன் வளர்ச்சி அடைந்து 75.30 டிரில்லியனாக இருந்தது. வங்கிகளில் டெபாசிட் செய்வது 11.75 சதவீதம் உயர்ந்துள்ளது. இது பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு வங்கிகளில் பண புழக்கத்திற்கு உதவியாக இருந்தது.

2016ம் ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி வங்ககளில் டெபாசிட் 96.68 டிரில்லியனாக இருந்தது. கடந்த மார்ச் 31ம் தேதி வரை ரூ. 108.05 டிரில்லியனாக இருந்தது. இதற்கு முந்தைய நிதியாண்டில் 9.72 சதவீதம் அதிகரித்திருந்தது. வங்கிகளின் வராக்கடன் ரூ. 14 டிரில்லியனாக உள்ளது. மொத்தம் வழங்கப்பட்ட கடனில் இது 15 சதவீதமாகும்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed