தான் பேசியிருந்தது யாருக்காவது காயத்தை ஏற்படுத்தி இருந்தால் தன்னை மன்னித்து விடுங்கள் என இந்திய கிரிக்கெ அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

hartik

பிரபலமான ‘காபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெ அணி வீரர் ஹர்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹர்திக் பாண்டியா பெண்களை குறித்து சில கருத்துக்களை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றில் கேள்வி சுற்று பகுதியில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி இவர்களில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என கேட்டபோது, ராகுலும்-பாண்டியாவும் விராட் கோலி என பதில் அளித்துள்ளனர். இதுவும் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.

சச்சின் மற்றும் தோனியை விட கோலி சிறந்த பேட்ஸ்மேன் இல்லை எனக் கூறி ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர். தான் பேசியதற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தனது பதிலுக்கு விளக்கமு, மன்னிப்பும் பாண்டியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “ நான் யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை. எனது பதில்கள் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய ஹர்திக் பாண்டியாவும், ராகுலும் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.