4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி…தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

லண்டன் :

4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

இங்கிலாந்து-இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. இறுதியில் 69.4 ஓவர்களில் இந்திய அணி 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது

அதிகபட்சமாக கோலி 58 ரன்கள், ரகானே 51 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெடுக்களையும், ஆண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

கார்ட்டூன் கேலரி