கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி! மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியது!

கொல்கத்தா:

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெற்ற 250 டெஸ்ட் போட்டியில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது வரலாற்று சாதனையாகும்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்திய அணியின் அபார பந்து வீச்சால் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியில் அதிபட்சமாக ஷமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியா முதல் இன்னிங்சில் 316 ரன் குவித்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது.

112 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 76.5 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 82, சாகா 58 ரன்கள் எடுத்தனர்.

mathc-1

நியூசிலாந்து அணியில் ஹென்றி, சான்ட்னர், ட்ரென்ட் போல்ட் தலா 3 விக்கெடுகளை வீழ்த்தினர். இதனையடுத்து நியூசிலாந்துக்கு 376 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து வீரர்கள்  தொடக்கம் சிறப்பாக இருந்தபோதிலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக அணியில் டாம் லாதம் 74, ரோன்சி 32 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த  டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. ஏற்கனவே முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி குறுகிய காலத்தில் இந்தியா முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக  பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.  ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.

கார்ட்டூன் கேலரி