கிரிக்கெட்: வெற்றியை நோக்கி இந்திய அணி!

சென்னை,

ங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த இன்னிங்சில்  இந்தியாவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.

இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்து ஆட்டத்தை  டிக்ளேர் செய்தது.  இளம் வீரர் கருண் நாயர், தனது முதல் சதத்தையே  முச்சதமாக மாற்றி சாதனை படைத்தார்.

சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா – இங்கிலாந்துக்கிடையேயான டெஸ்ட் போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 477 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்தியா, 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன் எடுத்திருந்தது.

கருண் நாயர் 71 ரன், முரளி விஜய் 17 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டம் ஆரம்பமானது.  டெஸ்ட் போட்டிகளில் கருண் தனது முதல் சதத்தை நிறைவு செய்ய, விஜய் 29 ரன் எடுத்து டாவ்சன் பந்துவீச்சில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார்.  நடப்பு தொடரில் அஷ்வின் 4வது அரை சதம் அடிக்க, மறு முனையில் கருண் இரட்டை சதம் அடித்தார். அஷ்வின் 67 ரன் எடுத்து ஸ்டூவர்ட் பிராடு பந்து வீச்சில்வே கேட்ச் கொடுத்தார்.

அடுத்து கருண் – ஜடேஜா ஜோடி 7வது விக்கெட்டுக்கு ரன் வேட்டையை தொடர்ந்தது. இளம் வீரர் கருணின்  அதிரடி அட்டகாசமாக இருந்தது. இது ரசிகர்களிடையே பெருத்த கரகோஷத்தை எழுப்பியது.

ரஷித் வீசிய 191வது ஓவரின் 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கருண், தனது முச்சதத்தை நிறைவு செய்து சாதனை படைக்க சேப்பாக்கம் ஸ்டேடி யம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்தது.

7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை இந்தியா  டிக்ளேர் செய்தது.

கருண் 303 ரன் (381 பந்து, 32 பவுண்டரி, 4 சிக்சர்), உமேஷ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 282 ரன் பின்தங்கிய நிலையில்  2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியினிர்,  4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன் எடுத்தது..

இன்று 5வது நாளான கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

மாலை 3.30 மணி நிலவரப்படி இங்கிலாந்து அணி 82 ஓவரில்  8 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணியின்  ஸ்டுவர்ட் போர்டு மற்றும் ஜோஸ் பட்லர் களத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக இந்தியா வெற்றி பெறும் நிலை உறுதியானது.