Random image

டில்லி கூவாங்கம் விழாவில் திருநங்கை வேடத்தில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் காம்பீர்

டில்லி:

லைநகர் டில்லியில் ஆண்டுதோறும் நடைபெறும்  திருநங்கைகளுக்கான ஹிஜ்ரா ஹப்பா என்ற விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்  திருநங்கை வேடத்தில் கலந்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கி அதகளப்படுத்தியவர் கவுதம் காம்பீர். சிறந்த கிரிக்கெட் வீரரான அவர் தற்போது  இந்திய அணியில் சேர்க்கப்படுவது இல்லை. இருந்தாலும் ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

சமூக ஆர்வலரான காம்பீர், பல விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருபவர்.  ஏற்கனவே ரக்‌ஷா பந்தன் தினத்தன்று, அவருக்கு திருநங்கைகள் ராக்கி கயிறு கட்டினர். அவர்களுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடுவதில் பெருமைப்படுவதாக தனது டுவிட்டரில் காம்பீர் குறிப்பிட்டிருந்தார்.

அப்போது,  ஹிஜ்ரா ஹப்பா விழாவில் கலந்துகொள்ள கவுதம் கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விழா வட இந்தியாவில் மிகவும் பிரபலம். இதில் ஆயிரக்கணக்கான திருநங்கை, திருநம்பிகள் கலந்து கொள்வது வழக்கம். இந்த விழாவில் காம்பீர் கலந்துகொண்டடார்.

அப்போது, சுடிதார் அணிந்து, நெற்றியில் பெரிய குங்கும் பொட்டு, துப்பட்டா அணிந்து கொண்டு திருநங்கையைப் போல காட்சி அளித்தார். அவருக்கு திருநங்கைகள் திலகமிட்டு வரவேற்று கவுரவித்தனர்.

அதைத்தொடர்ந்து விழாவில் பேசிய காம்பீர், உச்சநீதி மன்றத்தில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான  “377 பிரிவு நீக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பை அனைவருடன் சேர்ந்து நானும் நான் பாராட்ட விரும்புகிறேன். நான் அவர்களை (சமூகம்) மற்றும் இந்த நிகழ்வின் காரணமாக ஆதரிக்கிறேன்,. ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளாமல், வளர முடியாது, முன்னோக்கி செல்ல முடியாது என்று நான் உறுதியளிக்கிறேன். நாங்கள் இருப்பது போல் அவர்களையும்  இந்தியர்கள் மற்றும் கவுரவத்துடன் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும்,  திருநங்கைகளை ஆண், பெண் என்று பார்க்காமல் அவர்கள் மனிதர்கள்  என்று பாருஙகள்.. அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். நீங்கள்? என்று பேசினார்.

காம்பீரின் திருநங்கை வேடம் அணிந்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. அவரின் சேவையை பலரும் இவரை பாராட்டி வருகின்றார்.