கிரிக்கெட்: முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி

கேப்டவுன்:

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்தன.

3வது நாளான நேற்று மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. 4வது நாளான இன்றுதென் ஆப்பிரிக்கா 130 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம் காட்டினார்கள். இந்தியா 208 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா நிர்ணயம் செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1:-0 என்ற கணக்கில் முன்னிலையை பெற்றது.

கார்ட்டூன் கேலரி