ஐதராபாத்,
ந்திய கிரிக்க்ட அணியின் கேப்டன் விராட் கோலி,  கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பிரபல ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விரார் கோலி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியானாலும், டெஸ்ட் மேட்ச் ஆனாலும் விராட் கோலியின் அதிரடியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பது உண்டு.

ஏற்கனவே பேட்ஸ்மேனில் சிறந்த வீரராக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து, தற்போது அவரை ஓவர்டேக் செய்து சாதனை மனிதனாக விராட் கோலி திகழ்கிறார். , கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் அவரை ஒப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிறு அன்று நறைவடைந்தது. இந்த தொடரில் முதல் மற்றும் கடைசி போட்டியில் கோலி சதம் அடித்து அசத்தி தொடர் நாயகன் விருதை பெற்றார்.

இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை நேற்று (திங்கள்கிழமை) வெளியிட்டது.

அதில் விராட் கோலி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளிய கோலி தரவரிசையில் 889 புள்ளிகளை பெற்றுள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஒருவர் அதிக புள்ளிகள் பெற்றவர் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் 1998-ம் ஆண்டு 887 புள்ளிகள் பெற்றிருந்தார்.

தற்போது, விராட் கோலி 889 புள்ளிகள் பெற்று சச்சின் டெண்டுல்கரின் 19 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.   

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய வீரர்கள்:

1. விராட் கோலி – 889 புள்ளிகள் (29/10/17)

2. சச்சின் டெண்டுல்கர் – 887 புள்ளிகள் (13/11/98)

3. சௌரவ் கங்குலி – 844 புள்ளிகள் (17/03/00)

4. எம் எஸ் தோனி – 836 புள்ளிகள் (31/10/09)

5. முகமது அசாருதின் – 811 புள்ளிகள் (27/11/93)