உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது; தென் ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து

லண்டன்:

உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் நாளில் தென் ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.


டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 311 ரன்களை குவித்தது.

இதையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி,39.5 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி.காக் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார்.

ஆட்ட நாயகனாக பென் ஸ்டோக் தேர்வு செய்யப்பட்டார்.

 

கார்ட்டூன் கேலரி