Random image

ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக : தந்தையும் சகோதரியும் காங்கிரஸ்

 

லாவட், குஜராத்

சென்ற மாதம் ரவீந்தர ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜகவின் சேர்ந்த நிலையில் ஜடேஜாவின் தந்தையும் சகோதரியும் காங்கிரசில் இணைந்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இவருடைய மனைவி பெயர் ரிவாபா. ரவீந்திர ஜடேஜாவின் தந்தையின் பெயர் அனிருத் சிங் மற்றும் ஜடேஜாவின் சகோதரி பெயர் நைனாபா ஆகும்.

சென்ற மாதம் 5 ஆம் தேதி அன்று ஜாம்நகரில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பூனம்பென் தலைமையில் ஒரு பாஜக கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஜாம்நகர் மாவட்டம் கலாவட் நகரில் ஒரு தேர்தல் பேரணி நடந்தது. அதில் படேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் கலந்துக் கொண்டார். ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் மற்றும் அவர் சகோதரி நைனாபா ஆகியோர் ஹர்திக் படேல் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.