இத்தாலியில் திருமணம் செய்த வீராட்கோலி தேச பக்தர் இல்லை….பாஜக எம்எல்ஏ புது சர்ச்சை

போபால்:

இத்தாலியில் திருமணம் செய்த விராட் கோலி தேச பக்தர் இல்லை என்று பா.ஜ.க எம்எல்ஏ விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் வீராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா ஆகியோரது திருமணம் இத்தாலி மிலன் நகர் அருகே டுஸ்கேனி சொகுசு விடுதியில் கடந்த 11-ம் தேதி நடந்தது. இந்து முறைப்படி இந்த திருமணம் நடந்தது.

இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி வரும் 21ம் தேதி டில்லியிலும், 26-ம் தேதி மும்பையிலும் நடக்கிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ. பன்னாலால் சாக்யா பேசுகையில், “விராட் கோலி இந்தியாவில் பணம் சம்பாதிக்கிறார், பிரபலமாக உள்ளார். ஆனால் திருமணத்தை ஏன் இத்தாலியில் நடத்தினார்.

இந்து கடவுள் ராமர், கிருஷ்ணா இந்த மண்ணில்தான் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் விராட் கோலி மட்டும் திருமணம் செய்துக்கொள்ள இத்தாலிக்கு சென்று உள்ளார். அவர் தேசபக்தர் கிடையாது இது அனுஷ்கா சர்மாவிற்கும் பொருந்தும்’’ என்றார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதூர்வேதி பேசுகையில், “குஜராத் தேர்தல் மூலம் தெளிவான செய்தி கிடைத்து உள்ளது. எனவே மத்திய பிரதேசம்த்தில் தேசப்பற்று விவகாரத்தை எழுப்பாமல் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பது பா.ஜ.க.வுக்கு தெரியும்.

சமுதாயத்தை பிரிக்கும் வகையில் முன்னாள் பிரதமர், துணை ஜனாதிபதி மற்றும் ராணுவ தலைவரின் நேர்மை குறித்து மோடி கேள்வி எழுப்பினார். அதனால் குஜராத்தில் வெற்றி பெற்றார்கள்,”என்றார்.