கிரிக்கெட் – பார்வையாளர்களை மகிழ்வித்த மேஜிக் வெற்றிக்கு உதவவில்லை..!

--

டர்பன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மான்சி சூப்பர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி ஒன்றில், மைதானத்தில் மேஜிக் நிகழ்த்தினார் வீரர் ஒருவர்.

பார்ல் ராக்ஸ் மற்றும் டர்பன் அணிகள் மோதிய ஆட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய பார்ல் ராக்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 195 ரன்களை அடித்தது.

கடின இலக்கை விரட்டுவதற்காக களமிறங்கிய டர்பன் அணியின் லூபேவை தான் அவுட்டாக்கியதும், ராக்ஸ் அணியின் பவுலர் ஷம்சி, மைதானத்தில் மேஜிக் ஒன்றை செய்தார்.

தனது பையிலிருந்து சிவப்புநிற கைக்குட்டை ஒன்றை எடுத்த அவர், அதை பார்வையாளர்களின் முன்பாகவே, ஒரு நீண்ட குச்சியாக மாற்றிக்காட்டி அனைவருக்கும் ஆச்சர்யமூட்டினார்.

ஆனால் என்ன பிரயோஜனம்? பார்வையாளர்களை மகிழ்விக்க பயன்பட்ட மேஜிக், ஷம்சியினது அணியின் வெற்றிக்கு பயன்படவில்லை. 6 விக்கெட் வித்தியாசத்தில் டர்பன் அணி வென்றுவிட்டது.

You may have missed