இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் தீ விபத்து! ஆட்டம் நிறுத்தப்பட்டது!

புனே:

ந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறும் புனே மைதானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனே நகரிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுதான்.

இந்த நிலையில், இந்தியா இன்று தனது முதல் இன்னிங்சில் 22வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்திருந்த நிலையில்,  பவுண்டரி எல்லையிலுள்ள எலக்ட்ரிக் விளம்பர பலகையில் திடீரென புகைமூட்டம் எழுந்தது.

தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்த மைதான நிர்வாகிகள் தீயணைப்பு துறைக்கு உடனடியாக  தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்ட்டது.  தீ அணைக்கப்பட்ட பிறகு மீண்டும் ஆட்டம் துவங்கியது.

 

 

Leave a Reply

Your email address will not be published.