சோலாப்பூர், மகாராஷ்டிரா.

விவசாயி ஒருவர், மகாராஷ்டிரா முதல்வர் தன் உடலைப் பார்த்த பின்பே எரியூட்ட வேண்டும் என கடிதம் எழுது வைத்து விட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்

மகாராஷ்டிர விவசாயிகள், கடன் தள்ளுபடியை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 1 முதல் எந்த ஒரு விளைபொருளையும் விற்பனைக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்

இந்த நிலையில் கடன் தொல்லை தாங்காமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்

தனாஜி சந்திரகாந்த் ஜாதவ் என்பவர் சோலாப்பூர் அருகிலுள்ள கர்மாலா என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

45 வயதான இவருக்கு, தாய், மனைவி, இரு சகோதரர்கள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர்

முதல் மகன் 12ஆம் வகுப்பிலும் இளையமகன் 10ஆம் வகுப்பிலும் படிக்கிறார்கள்.

இவருக்கு விவசாயக் கடன் பாக்கி ரூ 60,000/- மற்றும் தனியாரிடம் வாங்கிய கடன்களும் உள்ளன..

கடன் தொல்லை தாங்க முடியாத ஜாதவ் நேற்று இரவு தன் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டார்.

அவர் எழுதியுள்ள 2 பக்க கடித்தத்தில், தன் உடலை, மகாராஷ்டிர முதல்வர் வந்து பார்க்கும் வரை எரியூட்டக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

அவரது உறவினர்கள் அதற்கிணங்க அவர் உடலை எரியூட்டவில்லை.

ஜாதவ் மறைவையொட்டி கர்மாலாவில் அனைத்துக்கட்சிகளும் கடையடைப்பு நடத்துகின்றன.