தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:

மிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும்  பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,  தமிழகத்திலும் சமீப காலமாக கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு, பாலியன் வன்முறை தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும்,  பெண்களுக்கு தகுந்த  பாதுகாப்பபு அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம்,  தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று  வேதனை தெரிவித்துள்ளது.  மேலும்,  தமிழகத்தில் நடைபெற்றுள்ள  கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு, பாலியல்  வன்முறை வழக்குகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இன்று காஷ்மீர் பல்கலை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காஷ்மீர் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு இந்தியாவுக்கே அவமானம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.