இளம் நடிகை பிரெக்‌ஷா மேத்தா தூக்கிட்டுத் தற்கொலை….!

லால் இஷ்க், கிரைம் பேட்ரோல் போன்ற தொடர்களில் நடித்த பிரெக்‌ஷா மேத்தா தன்னுடைய வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் ரத்தானதால் இரு மாதங்களாக வேலை எதுவும் இல்லாமல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்பு தன்னுடைய மனநிலையை இன்ஸ்டகிராமில் வெளிப்படுத்தியுள்ளார். அதில், உங்களுடைய கனவு மரணிப்பது தான் மோசமான விஷயமாகும் என்று தன்னுடைய வேதனையைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில் பிரெக்‌ஷா மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.