தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரிப்பு: சட்டமன்றத்தில் ஸ்டாலின் விளாசல்

சென்னை:

மிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில்  எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் சரமாரியாக  குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காவல்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான  ஸ்டாலின் பேசுகையில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று கூறினார்.

மேலும்,  தமிழகத்தில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குற்றங்கள் அதிகரிப்பில் சென்னை முதலிடம் வகித்து வருகிறது என்றும்,  சாதி கலவரங்களில் தென் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொள்ளையில் தென் மாநிலங்களில் தமிழகம் 2-ஆம் இடத்தில் உள்ளது என்று பட்டியலிட்டு பேசினார்.

தமிழகத்தில் பெண்களிடம் செயின் பறிக்க டில்லியிலிருந்து விமானத்தில் வரும் அளவுக்கு தமிழக சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும், தமிக காவல்துறைக்கு  ஓய்வு பெற்ற ஒருவரை மீண்டும்  டிஜிபியாக தொடர்ந்து பணி செய்ய வைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், ஓய்வு பெற்றவர் பணியில் இருப்பதால் அடுத்தவருக்கு பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

காவல் துறையில் சீர்திருத்தம் கொண்டு வர ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் ஆணையம்  அமைக்க வேண்டும் என்றும்,  தமிழக காவல்துறையில் உள்ள  காலியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,  தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலா? இருக்கிறது என்பது  என்பது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என்றும், சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது,  தமிழகம் மக்கள்  கொதிநிலையில் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து இறுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்து பேசினார்.