தமிழகத்தில் 75 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள்: ஆய்வில் தகவல்

--

டில்லி:

நாட்டின் மூன்றில் ஒரு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

அதில், தமிழகத்தில் 75 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக கூறி உள்ளது.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள  சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பதியப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகள் குறித்து, ஏ.டி.ஆர் என்ற அமைப்பு  ஆய்வு நடத்தியது. தற்போது அதன் புள்ளி விவரங்களை  வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள 4083 சட்ட மன்ற உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அதில், 1355 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவை இருப்பதாக கூறி உள்ளது.

மேலும், இவர்களில்  891 உறுப்பினர்கள் மீது  தீவிரமான கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் கூறி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 75 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள்  இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இவர்களில் 44 பேர திமுக உறுப்பினர்கள்  என்றும், 28 பேர் ஆளும்  அதிமுக கட்சி உறுப்பினர்கள் என்றும் கூறி உள்ளது.

பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் எம்.எல்.ஏக்கள் மீது இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதுபோல, புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் 30 பேரில், 11 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

அதிகபட்சமாக ஜார்காண்ட் மாநிலத்தில் 63 சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிர்மினல் வழக்குகள் உள்ளன.  இது கேரளாவில் 62 சதவீதமாகவும், பிகாரில் 58 சதவீதமாகவும், மகாராஷ்ட்ராவில் 57 சதவீதமாகவும் உள்ளது.

க்களவையில் 179 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ள புள்ளி விவரம், மாநிலங்களவையில் 51 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் கூறி உள்ளது.

இந்த வழக்குகள் முடிந்து, குற்றம் நிரூபிக்கபட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கபட்டால் மட்டுமே இவர்கள் பதவி இழப்பார்கள்… ஆனால். .. அதற்கு எவ்வளவு காலம் ஆகுமோ……