பா ஜ க வில் அதிகரித்து வரும் குற்றப்பின்னணி பிரமுகர்கள்

டில்லி

பா ஜ க வில் குற்றப் பின்னணி உள்ள பிரமுகர்கள் பெருமளவில் இணைந்து வருகின்றனர்.

தேர்தல் அறிவிப்பு வந்து வேட்பு மனு தாக்கல் செய்வதும்  அதை ஆதாரமாகக் கொண்டு எத்தனை வேட்பாளர்கள் குற்றப் பின்னணியுடன் உள்ளனர் என தகவல் வருவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.  அனைத்துக் கட்சிகளிலுமே குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் காணப் படுகின்றனர்.   அவர்களில் பலரும் வெற்றி பெற்று சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ உறுப்பினர்கள் ஆகி விடுகின்றனர்.   அது மட்டுமின்றி அவர்களில் சிலர் அமைச்சர்களாகவும் ஆகி விடுகின்றனர்.

இவர்களில் பலர் கட்சியில் இணையும் போதே குற்றப்பின்னணியுடன் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  உதாரணமாக முகுல் ராய் போன்றோர்கள் கட்சியில் இணைந்ததும் சுத்தமானவர்கள் ஆகி விடுகின்றனர்.   குற்றப் பின்னணி உள்ளவர்கள் எனத் தெரிந்தும் இவர்கள் ஏன் கட்சியில் இணைக்கப்படுகின்றனர் என்பது கடந்த ஏப்ரல் மாதம் பூனேவில் நிதின் கட்காரி கூறியதில் இருந்து இப்போது தெளிவாகிறது.   நாக்பூரில் கிரிமினல்கள் எனச் சொல்லப்பட்டவர்களை கட்சியில் இணைத்தது பற்றி அவர் அப்போது தெரிவித்த கருத்துக்கள் இதோ :

”பா ஜ க கிரிமினல்களை கட்சியில் இணைத்துக் கொள்கிறது என்பது எப்போதுமே விமர்சிக்கப்படும் ஒரு வ்ஷயமாகும்.   கிரிமினல்கள் கட்சியில் இணைந்தால் அவர்கள் குற்றங்கள் குறைந்து பெருமைகள் அதிகரிக்கின்றன.   நமது கட்சியில் இணையும் கிரிமினல்கள் தங்களை சுத்தப் படுத்திக் கொள்ளவே இணைகின்றனர்.  வால்யா என்னும் கொள்ளைக்காரன் திருந்தியபின் வால்மீகி முனிவராகி இதிகாசங்களை படைத்தார்.   அதே போல நாக்பூரில் கொள்ளைக்காரன் என அறியப்பட்ட ஒருவர் தற்போது பெண்களின் பாதுகாவலராக உள்ளார்.   தற்போது அவர் நமது கட்சியில் இருப்பதால் பெண்கள் நடு இரவிலும் தைரியமாக நாக்பூரில் வீடுகளுக்கு செல்ல முடிகிறது”  எனக் கூறி உள்ளார்.

”இது ஆளூம் பா ஜ க வின் தலைவர் கூறியது.   ஆனால் இதே கருத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெளியில் கூறாமல் பின்பற்றி வருவதால் தான் குற்றப் பின்னணி பற்றிக் கவலைப்படாமல் அனைத்துக் கட்சியிலும் கிரிமினல்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்” என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.