சென்னை:
“படப்பிடிப்பில் காலில் அடிப்பட்டதால் செயல் இழந்தது. தற்போது அதன் விளைவாக தற்போது இன்னொரு காலும் செயல் இழந்துவிட்டது. ஆகவே வாழ்வதற்கு வழியின்றி தவிக்கிறேன்” என்று துணை நடிகர் ஒருவர் கதறுகிறார்.
தருமபுரியை சேர்ந்த ஜெயபால் என்பவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  ஊமைவிழிகள், உயர்ந்த உள்ளம், தேவர்மகன், முத்து, வானத்தை போல போன்ற பல படங்களில் ஓரளவு முகம் தெரியும் கதா பாத்திரங்களில் நடித்துள்ளார்.
1
கடந்த 1996ம் ஆண்டு நடிகை சுஹாசினி இயக்கிய இந்திரா திரைப்படத்தில் நடித்த போது  ஜெயபாலின்  காலில் அடிபட்டதால் ஒரு கால் எடுக்கப்பட்டது. தற்போது மற்றொரு காலும் செயலிழந்துவிட்டது. தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தும் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் தமக்கு, குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசோ, நடிகர் சங்கமோ உதவ வேண்டும் என்றும் சிகிச்சைக்கு பணம் செலுத்தவும் வழியின்ற தவிப்பதாகவும் கோரிக்கை விடுத்துள்ளார் ஜெயபால்.
யாராவது உதவட்டும்.. முதலில் நடிகர் சங்கம் உதவ வேண்டும். செய்யுமா?