ஜூவாண்டஸ் அணிக்கு மாறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ

உலகில் முன்னணி நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூவாண்டஸ் அணியில் இணைந்தார். உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகி ஜூவன்டஸ் அணியில் சேர்ந்தார்.

cristiano

2009ம் ஆண்டு மான்செஸ்டர் அணியிலிருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறிய ரொனால்டோ, இதுவரை 451 கோல்களை அடித்துள்ளார். ரியல் மாட்ரிட் கிளப் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றார். ரியல் மாட்ரீட் அணி வெற்றிப்பெற்று கைப்பற்றிய 16 கோப்பைகளில் ரொனால்டோவின் பங்கு அளப்பறியது. உலகளவில் மிகச் சிறந்த வீரராக மாறியுள்ள ரொனால்டோ ரியல் மாட்ரீட் கிளப் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

ரியல் மாட்ரீட் அணியிலிருந்து விலகி இத்தாலி கிளப் அணியான ஜூவாண்டஸ் அணிக்கு மாற உள்ளதாக ரொனால்டோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். ஜூவான்டஸ் அணி சுமார் 100 மில்லியன் தொகைக்கு 4 ஆண்டுகள் விளையாட ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில் ஜூவான்டஸ் அணி சார்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரொனால்டோவின் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது.