அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த இளைஞர் கைது

--

அமைச்சர் ஜெயக்குமாரை சமூகவலைத்தளங்களில் விமர்சித்த இளைஞர், சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்திலேயே காவல்துறையினரால் செய்யப்பட்டார்.

கடந்த 2017-ம்  வருடம்  கடலூரை சேர்ந்த வீரமுத்து என்ற இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சிக்கும் வகையில் இருந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார்.  இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் வீரமுத்து  சிங்கப்பூரில் வெல்டிங் தொழில் செய்து வந்ததால் அவரை கைது செய்ய இயலவில்லை.

இந்த நிலையில் தீபாவளியை சொந்த ஊரில், நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார் வீரமுத்து. அவரை விமான நிலையத்திலேயே கைது செய்த சைபர் கிரைம் போலீஸார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபத பிகராஷ் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது தான் செய்தது தவறு என வீரமுத்து மன்னிப்பு கோரினார்.

மன்னிப்பை ஏற்றுகொண்ட நீதிபதி செய்த தனது பதிவுக்காக ஊடகத்தின் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  நிபந்தனை விதித்தா ஜாமீன் அளித்தார்.  வீரமுத்துவும் ஊடகத்தின் முன்பும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.