டெல்லி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தம்பதியரை கைது செய்ய திருப்பூர் கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
judgement
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் விஜயகாந்த், பிரேமலதா தம்பதியினருக்கு  4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் திருப்பூர் கோர்ட்டு அவர்களை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் விஜயகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திருப்பூர் கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு ஆணைக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், அரசை விமர்சிப்பது எப்படி அவதூறாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞரை பயன்படுத்துவது ஏன் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளின் பட்டியலை தமிழக அரசு  2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு சட்டப்பிரிவை , பழிவாங்கும் ஆயுதமாக அரசு பயன்படுத்தக்கூடாது என்றும், அரசை விமர்சிப்பது எப்படி அவதூறு வழக்காகும்? குடிமக்களை காக்க வேண்டியது கோர்ட்டின் கடமை என்று கூறினர்.
இந்த வழக்கின் மீதான விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.