தினகரன் குறித்து விமர்சித்தால்….!: அமைச்சர் ஜெயக்குமாருக்கு வெற்றிவேல் எச்சரிக்கை

சென்னை:

டிடிவி தினகரன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தால் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்றும்,  அமைச்சர் ஜெயக்குமார் தனது பதவியை இழக்க நேரிடும் என்று டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான வடசென்னை மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான வெற்றிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   “கட்சியை திறம்பட நடத்திக்கொண்டிருக்கிறார் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். கோடிக்கணக்கான தொண்டர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏக்கள் என்று அனைவரும் அவரது பின்னே அணிவகுத்துள்ளனர்.

மிகச் சிலர் தவறான வழிகாட்டுதலில் தினகரனை எதிர்த்து தேவையின்றி பேசி வருகிறார்கள். அவர்களுக்கு மக்கள் செல்வாக்கோ தொண்டர்கள் செல்வாக்கோ கிடையாது.

டிடிவி தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துவருவது கண்டிக்கத்தக்கது.

தொடர்ந்து அவர் இப்படி பேசிவந்தால் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி பதவியையும், அமைச்சர் பதவியையும் இழக்க நேரிடும்” என்று வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.