குரோஷியாவின் வெற்றியை காண முடியவில்லை : தீயணைப்பு வீரர்கள் கவலை

க்ரப், குரோஷியா

லகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணி  அரை இறுதிப் போட்டியில் வென்றதை பணியின் காரணமாக பார்க்க முடியவில்லை என அந்நாட்டு தீயணைப்பு வீரரகள் கூறி உள்ளனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.   உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவில் குழுமி உள்ளனர்.  அவர்களுக்கு இது ஒரு திருவிழா போல உள்ளது.   இந்தப் போட்டியில் இருந்து விலகிய நாடுகளின் கால்பந்து ரசிகர்களும் தொடர்ந்து போட்டியைக் கண்டு களித்து வருகின்றனர்.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் குரோஷியா அணி மோதியது.    விறுவிறுப்பான இந்தப் போட்டியில் இங்கிலாந்தை முறியடித்து குரோஷியா இறுதிக்கு சென்றுள்ளது.   குரோஷிய அணி இறுதிச் சுற்றுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.   உலகெங்கும் உள்ள ரசிகர்கள் இதை ஒட்டி குரோஷிய அணிக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் இதற்கு கவலை தெரிவிக்கும் குரோஷிய மக்களும் உள்ளனர்.  அந்நாட்டின் தீயணைப்புப் படை வீரர்கள் தான் அவர்கள்.   இது குறித்து ஒரு வீடியோ ஒன்று முகநூலில் பரவி வருகிறது.   அதில் குரோஷிய நாட்டு தீயணைப்புப் படை வீரர்கள் விளையாட்டை பார்த்துக் கொண்டிருப்பது போலவும், திடீரென அழைப்பு மணி ஒலித்ததும் அவர்கள் விளையாட்டை பார்ப்பதை நிறுத்தி விட்டு பணிக்கு செல்வதாகவும் உள்ளது.

தங்கள் நாட்டின் வெற்றி குறித்து குரோஷிய நாட்டு தீயணைப்புப் படை வீரர்கள். “எங்கள் நாடு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.   அதே நேரத்தில் அதை பார்க்க முடியாமல் பணிக்குச் சென்றது கவலையை அளிக்கிறது” என தெரிவித்துள்ளனர்.

You may have missed