​​ஜெய்ப்பூர்:

பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த, கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

“காபி வித் கரண்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் பங்கேற்ற ஹர்திக் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில், பெண்கள் பற்றி ஆபாசமாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

நிகழ்ச்சியில்,பாண்ட்யாவுடன் ராகுலும் பங்கேற்று இருந்தார். இந்த சர்ச்சை காரணமாக, விசாரணை முடியும் வரை  கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருவருக்கும் பிசிசிஐ தடை விதித்தது.

இந்த தடையை பிசிசிஐ நீக்கிய நிலையில், ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியிலும், கே.எல்.ராகுல் இந்தியா ஏ அணியிலும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், இநத விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பல்வேறு மகளிர் அமைப்புகளின் புகாரை ஏற்று, கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக், கே.எல்.ராகுல் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கரண் ஜோஹர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் மீது கைது நடவடிக்கை பாயுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க போலீஸார் மறுத்து விட்டனர்.