உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும் சுமார் 81.5 கோடி பேர் பசியால் வாடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“உலகம் முழுவதும் சுமார் 81.5 கோடி பேர் பசியால் வாடுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதம் ஆகும். இவர்களில் 76 கோடி பேர் ஆசியா மற்றும்  ஆப்பிரிக்க கண்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (ஆசியா: ம் 52 கோடி பேர்,  ஆப்பிரிக்கா: 24 கோடி பேர்)

உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் பசியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 10 வருடங்களில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து உள்ளது.  பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய காரணம்” என்று

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.